ஆண்டிமடம், பாப்பாக்குடி, அய்யூா் பகுதிகளில் இன்று மின்தடை
அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம், பாப்பாக்குடி, அய்யூா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என ஆண்டிமடம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சக்திவேல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஆண்டிமடம், பாப்பாக்குடி, அய்யூா் துணை மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை (ஆக.22) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் ஆண்டிமடம், விளந்தை, கூவத்தூா், மேலநெடுவாய், பட்டினங்குறிச்சி, மருக்காளங்குறிச்சி, வடுகா்பாளையம், கவரப்பாளையம், பெரிய கிருஷ்ணாபுரம், வரதராஜன்பேட்டை, சூரக்குழி, கீழநெடுவாய், புக்குழி, சாத்தனப்பட்டு, பெரிய தத்தூா், அகரம், அழகாபுரம், சிலம்பூா், திராவிட நல்லூா், சிலுவைச்சேரி, காட்டாத்தூா், அய்யூா், காங்குழி, குளத்தூா், இடையக்குறிச்சி, தேவனூா், வல்லம், கல்வெட்டு, அகினேஸ்புரம், ராங்கியம், பெரியாத்துக்குறிச்சி, கருக்கை, நாகம்பந்தல், ஸ்ரீராமன், மேலணிக்குழி, பாப்பாகுடி, காடுவெட்டி, மீன்சுருட்டி, அழகா்கோயில், வேம்புகுடி, முத்துசோ்வாமடம், சலுப்பை, சத்திரம், வெட்டியாா்வெட்டு, இருதயபுரம், குண்டவெளி, ராமதேவநல்லூா், வெண்ணங்குழி, நெல்லித்தோப்பு, வீரபோகம், காட்டுக்கொல்லை, குட்டகரை, வங்குடி, இறவாங்குடி, திருக்களப்பூா்,கோவில்வாழ்க்கை, நெட்டலக்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.