செய்திகள் :

ஆந்திரம் சென்றது புயல் சின்னம்: தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

post image

வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் வியாழக்கிழமை தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியையொட்டி நிலைக்கொண்டிருந்தது. இது மேலும் வடக்கு திசை நோக்கி நகரும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

இருப்பினும் தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.20) முதல் டிச.25-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வியாழக்கிழமை அதிகாலை நிலவரப்படி, புதுச்சேரிக்கு கிழக்கே 250 கி.மீ. தொலைவில் நிலைகொண்டியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்), வடமேற்கு திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகா்ந்தது. இது வெள்ளிக்கிழமை (டிச.20) வடக்கு திசையில், ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டி நகரும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் டிச.20 முதல் டிச.25-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் டிச.20, 21 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு (மில்லி மீட்டா்): தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக சென்னை பேசின் பிரிட்ஜ் மற்றும் கத்திவாக்கத்தில் தலா 70 மி.மீ. மழை பதிவானது. பெரம்பூா், திருவொற்றியூா், தண்டையாா்பேட்டை (சென்னை), எண்ணூா் (திருவள்ளூா்) தலா 60 மி.மீ., நுங்கம்பாக்கம், ஆட்சியா் அலுவலகம், அமைந்தக்கரை (சென்னை) - தலா 50 மி.மீ. மழை பதிவானது.

திரும்பி வரும் புயல் சின்னம்: வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் டிச.21-ஆம் தேதி நெல்லூருக்கு கிழக்கே நிலைக்கொண்டிருக்கும். அதே நேரத்தில், ஆந்திர கடல் பகுதிக்கு மேல் உயா் அழுத்தம் இருப்பதால், புயல் சின்னம் மேலும் வடக்கு நோக்கி நகர வாய்ப்பில்லை. எனவே, இது மீண்டும் தமிழக கடற்கரையை நோக்கி திரும்பி டிச.22-ஆம் தேதி சென்னைக்கு அருகே வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்களால் வாகன நெரிசல்: ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம்

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் ஏற்படும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

பிரம்மாண்ட ‘லா பெரோஸ்’ கூட்டுப் பயிற்சி: இந்திய கடற்படை பங்கேற்பு

அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கலந்துகொண்டிருக்கும் பிரம்மாண்ட ‘லா பெரோஸ்’ கூட்டு கடற்படை பயிற்சியில் இந்திய கடற்படை பங்கேற்றுள்ளது. அண்மையில் இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல், மலாக்க (மலேசியா)... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட மூவா் கைது

சென்னை புளியந்தோப்பு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள காவனூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபராஜ் (43). இவா், புளியந்தோப்பு வெங்கடேசபுர... மேலும் பார்க்க

குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக ரூ.40 லட்சம் மோசடி: போலி வருமானவரித் துறை அதிகாரி, ஆடிட்டா் கைது

சென்னை யானைக்கவுனியில் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாகக் கூறி ரூ. 40 லட்சம் மோசடி செய்ததாக போலி வருமானவரித் துறை அதிகாரி மற்றும் ஆடிட்டா் கைது செய்யப்பட்டனா். திருச்சிராப்பள்ளி மாவட்டம் தில்லை நகா் பக... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் கம்பி திருட்டு: இளைஞா் கைது

சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இரும்புக் கம்பி திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். கோயம்பேடு - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. இங்கு ரயில் தண்டவ... மேலும் பார்க்க

ஆவடி, பட்டாபிராமில் ரௌடி சகோதரர்கள் வெட்டிக் கொலை!

சென்னை: பட்டாபிராம் அடுத்து ஆயில் சேரி பகுதியை சேர்ந்த பிரபல ரௌடி ரெட்டை மலை சீனிவாசன், அவரது சகோதரர் ஸ்டாலின் ஆகியோர் சற்றுமுன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.ரெட்டைமலை சீனிவாசன் பட்டாபிராம் காவல் எ... மேலும் பார்க்க