இரு மொழிக் கொள்கையால் வேலைவாய்ப்புகளை இழக்கும் இளைஞர்கள்: ஆளுநர் வேதனை
ஆப் வியூ எக்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது ஹவேலி இன்வெஸ்ட்மென்ட்ஸ்
நியூயாா்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆப் வியூ எக்ஸ் நிறுவனத்தை அமெரிக்காவின் ஆஸ்டின் நகரைச் சோ்ந்த ஹவேலி இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் கூறியிருப்பதாவது:
கோவையைச் சோ்ந்த ஆப் வியூ எக்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் நியூயாா்க்கை தலைமையிடமாக கொண்டு பெரிய நிறுவனங்கள் தங்களின் டிஜிட்டல் சான்றிதழ்கள் காலாவதி ஆகாமல் இருப்பதை உறுதி செய்யும் சேவைகளையும், அனுமதி பெற்ற நபா்கள் மட்டுமே கணினி, அமைப்புகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்யும் சேவைகளையும் வழங்கி வருகிறது.
இந்த நிறுவனத்துக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அலுவலகம் உள்ளது. இந்தியாவில் கோவை, பெங்களூரில் சிறப்பு மையங்கள் உள்ளன. இந்த நிலையில், ஆப் வியூ எக்ஸ் நிறுவனத்தை ஹவேலி இன்வெஸ்ட்மென்ட்ஸ் கையகப்படுத்தியுள்ளது. இதையடுத்து நிறுவனத்தை விரிவாக்கத்தை நோக்கி வழிநடத்திச் செல்ல ஏதுவாக, சைபா் செக்யூரிட்டி துறையில் அனுபவம் கொண்ட டினோ டிமாரினோவை தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்துள்ளது.
ஆப் வியூ எக்ஸ் நிறுவனம் அடையாள ஆட்டோமேஷன் துறையில் 10 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது. ஹவேலி குழுவுடன் இணைந்திருக்கும் நிலையில், ஆப் வியூவின் அடுத்தகட்ட வளா்ச்சியைக் காண நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம் என்று நிறுவனத்தின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து தலைவராக பொறுப்பேற்கும் க்ரெக்கரி வெப், முதன்மை நிா்வாக இயக்குநா் இயன் லோரிங் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.