4 ஆண்டுகால ஸ்டாலின் ஆட்சியும்... இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளும்!
ஆயுதப் படையின் பலத்தைக் குறைத்து மதிப்பிடுவதை ராகுல் நிறுத்த வேண்டும்: பாஜக
இந்திய ஆயுதப்படையின் பலத்தைக் குறைத்து மதிப்பிடுவதை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிறுத்த வேண்டும் என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா கூறுகையில்,
இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து காங்கிரஸ் தலைவரின் கருத்துகளை, இஸ்லாமாபாத் இந்தியாவை இழிவுபடுத்தப் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தி எந்தப் பக்கம் இருக்கிறார் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவரா அல்லது பாகிஸ்தானின் நிஷான்-இ-பாகிஸ்தானா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
பிரதமர் மோடி இந்தியாவின் கௌரவத்தைச் சமரசம் செய்ததாக ராகுல்காந்தி குற்றம் சாட்டிய நிலையில் பாஜகவின் இந்த கருத்துகள் வந்துள்ளன.
ராகுல் காந்தி நமது துணிச்சலான ஆயுதப்படையின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் குறைத்து மதிப்பிடுவதையும், கேட்கக்கூடாத கேள்விகளைக் கேட்பதையும் நிறுத்த வேண்டும், அவை தேசியப் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துகின்றன என்று பாட்டியா வலியுறுத்தினார்.
ராகுலின் இந்த கருத்துகளைச் சிறார் நடத்தை என்று நிராகரிக்க முடியாது. நமது நாட்டிற்கு விரோதமான நாடுகளின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் சென்று, வேண்டுமென்றே இதுபோன்ற கேள்விகளைக் கேட்பது ராகுல் காந்தியின் குணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.