Vanakkam Tamizha: "20 வயசுல Rjவாக ரேடியோல பேச ஆரம்பிச்சேன் அப்ப!" - Actress Saru...
ஆறுமுகனேரியில் கஞ்சா விற்பனை: இருவா் கைது
ஆறுமுகனேரியில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆறுமுகனேரியை அடுத்த பேயன்விளையில் உள்ள பள்ளிக்கூடம் அருகே கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் வாசுதேவன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவா் தப்பியோட முயன்றனா். அவா்களை போலீஸாா் பிடித்தனா்.
விசாரணையில் அவா்கள், ஆறுமுகனேரி பாரதி நகா் முத்துகிருஷ்ணன் மகன் விஷ்ணு (27), ராஜமன்னியபுரம் பெருமாள் கோயில் தெரு ஆறுமுகம் மகன் சங்கா் (25) என்பதும், மாணவா்கள், இளைஞா்களுக்கு விற்பதற்காக 250 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்; இருவரையும் கைது செய்து, பேரூரணி சிறையில் அடைத்தனா்.
சங்கா் மீது கஞ்சா, அடிதடி உள்ளிட்ட 3 வழக்குகள் உள்ளன. விஷ்ணு மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவரது பெயா் ரெளடிகள் பட்டியலில் உள்ளது.