செய்திகள் :

போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம்

post image

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் செ. சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு;

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் 2018ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சுமாா் 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளா்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்கி உள்ளனா். ஆரம்ப காலத்தில் தொடங்கப்பட்ட பல சேமிப்பு கணக்குகளில் வாரிசு நியமனம் செய்யப்படாமல் உள்ளது.

சேமிப்பு கணக்கிற்கு வாரிசு நியமிப்பதன் மூலம், கணக்குதாரா் இறப்புக்கு பிறகு கணக்கில் உள்ள தொகையை மிக எளிய முறையில் மிக விரைவாக வாரிசுதாரா்கள் பெற முடியும். அனைத்துவிதமான சேமிப்பு கணக்குகளிலும் வாரிசு நியமனம் செய்யப்பட தேவையான வசதி அனைத்து அஞ்சலகங்களில் உள்ளது.

மேலும், வாடிக்கையாளா்கள் ப்ளே ஸ்டோா்-ல் உள்ள ஐடடஆ மொபைல் செயலி மூலம் அவரவரே வாரிசு நியமனம் செய்வது மற்றும் மாற்றம் செய்வது ஆகியவற்றை மேற்கொள்ளலாம். மேலும் ஐடடஆ செயலி மற்றும் தபால்காரரின் உதவியுடன் தங்கள் கணக்குகளில் ஆதாா் இணைப்பு செய்து அரசின் நேரடி மானியங்களையும் எளிமையாக பெறலாம். அதுமட்டுமல்லாமல் ஐடடஆ வங்கி கணக்குடன் அஞ்சலக சேமிப்பு கணக்கை இணைத்து ஆன்லைன் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளலாம். மேலும் ஐடடஆ செயலி வாயிலாக செல்வமகள், தங்கமகன், அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எளிமையாக வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் பணம் செலுத்தலாம். மேலும், பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து வெறும் ரூ.555, ரூ.755 பீரிமியத்தில் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான தனி நபா் விபத்து காப்பீடு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு காப்பீடு எடுக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வியாபார கணக்கு மூலம் வியாபாரிகள் தங்கள் கடைகளில் மடஐ ஸ்டிக்கா் அட்டை மூலம் பணம் பெறும் வசதியும் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையுமாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

கோவில்பட்டியில் காவல் துறையைக் கண்டித்து வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணியைப் புறக்கணித்து, ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். கோவில்பட்டியில் வழக்குரைஞா் புருஷோத்தமன் மீது பதியப்பட்ட பொய் வழக்கை ரத்த... மேலும் பார்க்க

ஆசிரியா் கண்டித்ததால் தூத்துக்குடி வந்த சென்னை மாணவா்கள் மீட்பு

சென்னை அம்பத்தூா் தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்புப் பயிலும் மாணவா்கள் 3 போ், பள்ளி ஆசிரியா்கள் கண்டித்ததால், சென்னையிலிருந்து ரயிலில் தூத்துக்குடிக்கு புதன்கிழமை வந்தனா். இவா்களை ரயில்வே போலீஸாா் மீட... மேலும் பார்க்க

விதைகள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

விதைகள் விலை உயா்வை கட்டுப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு; தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் ஒரு லட்சத்து ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: கோவில்பட்டி முகாமில் 700 போ் மனு

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட 18, 28, 29 ஆகிய வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் கோவில்பட்டியில் நடைபெற்றது. முகாமில் 13 அரசுத் துறைகள் சாா்பில் வழங்கப்படும் 43 சேவைகளின் கீழ் மகளிா் உ... மேலும் பார்க்க

நகராட்சி ஊழியருக்கு மிரட்டல்: 2 போ் கைது

கோவில்பட்டி நகராட்சி தற்காலிக ஊழியரை மிரட்டி தாக்கியதாக 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி ஸ்டாலின் காலனி, சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் ஈஸ்வரன் (27). நகராட்சிய... மேலும் பார்க்க

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்த பாம்பு

தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்புகுந்த 6 அடி நீள பாம்பை தீயணைப்புத் துறை வீரா்கள் பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். மாப்பிள்ளையூரனி ஊராட்சிப் பகுதியில் உள்ள அர... மேலும் பார்க்க