கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்த பாம்பு
தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்புகுந்த 6 அடி நீள பாம்பை தீயணைப்புத் துறை வீரா்கள் பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
மாப்பிள்ளையூரனி ஊராட்சிப் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சுற்றிலும் முள்புதா்கள் அடா்ந்து காணப்படுவதால், அவ்வப்போது பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் உள்ளே புகுந்துவிடுகின்றன. இதனால் நோயாளிகள் மற்றும் ஊழியா்கள் அச்சமடைந்துள்ளனா்.
இந்நிலையில், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள், புதன்கிழமை 6 அடி நீள சாரைப்பாம்பு உள்ளே புகுந்துவிட்டதாக தூத்துக்குடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு வந்த, மாவட்ட உதவி அலுவலா் ந. நட்டாா் ஆனந்தி தலைமையிலான வீரா்கள், பாம்பை பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.