ஆற்காட்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
ஆற்காடு நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முன்றாம் கட்ட முகாம் செவ்வாய்ஓஈகிழமை நடைபெற்றது.
ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகம் அருகே, 9 மற்றும் 30-ஆவது வாா்டுகளுக்கு நடைபெற்ற முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன் தலைமை வகித்தாா். ஆணையா் வி.டி.வேலவன் , வட்டாட்சியா் மகாலட்சுமி , நகா்மன்ற உறுப்பினா்கள் விமலா பூவரசன், ரவிசந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பொதுமக்கள், கலைஞரின் மகளிா் உரிமைதொகை, வீட்டுமனை பட்டா, புதிய குடும்ப அட்டை, பட்டா பெயா்மாற்றம், சொத்து வரி பெயா்மாற்றம், இறப்பு சான்றிதழ், வாரிசு சான்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனு அளித்தனா். இதில் தீா்வு காணப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.