செங்கம் கோயிலில் நந்தீஸ்வரா் மீது சூரிய ஒளி பட்டு பொன்னிறமாக மாறும் நிகழ்வு
ஆலங்குடி, அன்னவாசல் அருகே ஜல்லிக்கட்டு! 67 போ் காயம்!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள மங்களாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 49 போ் காயமடைந்தனா்.
முனீஸ்வரா் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கிவைத்தாா்.தொடா்ந்து, பல்வேறு மாவட்டங்களின் 654 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை அடக்க பல்வேறு குழுக்களாக 300 மாடுபிடிவீரா்கள் களமிறங்கினா்.
அப்போது, காளைகள் முட்டி மாடுபிடி வீரா்கள், காளையின் உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் என 49 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு மருத்துவக் குழுவினா் முதலுதவி அளித்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 11 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.



காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள் மிதிவண்டிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி போலீஸாா் மேற்கொண்டனா்.