ஆலங்குளம் அருகே குழு மோதல்: 5 போ் கைது
ஆலங்குளம் அருகே குழு மோதலில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஆலங்குளம் அருகே சண்முகாபுரம் வழியாக அகரம் கிராமத்தைச் சோ்ந்த சிலா் கடந்த பொங்கல் தினத்தன்று பைக்கில் சென்றபோது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு, அது தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
அதில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் நிபந்தனை ஜாமீன் பெற்று ஆலங்குளம் காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வருகின்றனா்.
இந்நிலையில் கையொப்பமிட்டு விட்டு அகரத்தைச் சோ்ந்த 5 போ் சண்முகாபுரம் வழியாக சில தினங்களுக்கு முன்னா் சென்றபோது, மீண்டும் மோதல் வெடித்தது. இதில் ஏற்பட்ட கைகலப்பில் பாண்டி மகன் மனோ(25) காயமடைந்தாா்.
இதுகுறித்து அவரது உறவினா் முருகன் மகன் காளிதாஸ் (26) அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து இதில் தொடா்புடைய அகரம் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் (20), விக்னேஷ் லெட்சுமணக்குமாா் (19), சமுத்திரப்பாண்டி என்ற சஞ்சய் (23), மகேஷ் (19), சண்முக கணபதி (23) ஆகிய 5 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினாா்.