கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
ஆல்யா மானசாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மணிமேகலை!
சின்ன திரை நடிகை ஆல்யா மானசாவுக்கு நடிகை மணிமேகலை இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனை விடியோவாகப் பதிவு செய்து ரசிகர்களுடன் ஆல்யா மானசா பகிர்ந்துள்ளார்.
சின்ன திரையில் முன்னணி நடிகையான ஆல்யா மானசா, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கு முன்பு சன் தொலைக்காட்சியில் இனியா தொடரில் நாயகியாக ஆல்யா நடித்திருந்தார்.
அந்தத் தொடருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய தொடரில் ஆல்யா நடிக்கவுள்ளார்.
2017ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நாயகியாக நடித்து சின்ன திரையில் அறிமுகமான ஆல்யா மானசா, அதில் உடன் நடித்த சக நடிகரான சஞ்சீவ் கார்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
2019-ல் இவர்களுக்குத் திருமணம் நடந்த நிலையில், இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். சிறிய இடைவேளைக்குப் பிறகு ராஜா ராணி பாகம் 2 தொடரிலும் ஆல்யா மானசா நடித்திருந்தார்.
இவரின் கணவர் சஞ்ஜீவ், குளிர், 6 அத்தியாயங்கள், சகாக்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜா ராணி தொடரின் மூலமே ரசிகர்கள் மத்தில் பிரபலமானார்.

இதனிடையே இவர்களின் நெருங்கிய தோழியான மணிமேகலை, தனது கணவருடன் ஆல்யா மானசாவின் வீட்டிற்குச் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத ஆல்யா, அன்றைய பொழுதை மிகவும் மகிழ்ச்சியாக பிடித்த நபர்களுடன் கழித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விடியோவையும் சமூக வலைதளங்களில் ஆல்யா மானசா பகிர்ந்துள்ளார். அதில், மணிமேகலையுடன் சிரித்துப் பேசி அரட்டை அடிப்பதைப் போன்று உள்ளது. ஆல்யாவின் இரு குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டது மகிழ்ச்சிகரமானது என மணிமேகலையின் கணவர் உசேன் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | மீண்டும் சின்னதிரையில் நடிக்கும் முன்னாள் மத்திய அமைச்சர்!