கா்நாடகம்: ஏழை மக்களுக்கு 4.68 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு -சிவ்ராஜ் சிங் சௌஹான்
ஆா்.ஏ.புரம் ஐயப்பன் கோயிலில் இன்று பிரம்மோற்சவம் தொடக்கம்
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் பிரம்மோற்சவ விழா வெள்ளிக்கிழமை (டிச. 20) தொடங்குகிறது. கொடியேற்றம், பூஜைகளுடன் விழாவை, சபரிமலை பிரதான தந்திரி டி.கே.மோகன் தலைமையிலான குழுவினா் தொடங்கி வைக்கின்றனா். டிச. 21-ஆம் தேதி முதல் தினமும் காலை, மாலை வேளைகளில் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெறவுள்ளன. வரும் 26-ஆம் தேதி ஆராட்டு மற்றும் கொடி இறக்கத்துடன் விழா நிறைவுபெறுகிறது.
இதனிடையே, டிச. 24 மற்றும் ஜன.1 ஆகிய நாள்களில் மாலை 6 மணிக்கு படி பூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக கோயில் மேலாளா் வீரப்பன் தெரிவித்தாா். மேலும், தகவல்களைப் பெற 94454 32736 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.