செய்திகள் :

இட ஒதுக்கீட்டுக்கான ஒரே தீர்வு, ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே: வேல்முருகன்

post image

தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறினார்.

சேலம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய நிர்வாகிகள் சிலர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி செய்தியாளர்களுடன் பேசியதாவது ``இட ஒதுக்கீட்டுக்கான ஒரே தீர்வு, ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே. சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றால், அனைத்து மக்களுக்கும் சம நீதி கிடைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.

பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்கிறார். ஆனால் என்.எல்.சி, பரந்தூர் உள்ளிட்ட மக்கள் போராட்டம் நடத்தும் இடங்களை அண்ணாமலை எட்டிக்கூட பார்க்கவில்லை. அண்ணாமலை ஏன் இவ்வாறு பாரபட்சம் காட்டுகிறார்?

இதையும் படிக்க:திருமாவளவனை சந்தித்த ஆதவ் அர்ஜுனா!

ஈழப் போராட்டத்துக்காக பாடுபட்டு உயிர்நீத்த, பிரபாகரன் பற்றி பலவாறான கருத்துகள் பேசப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், அதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை. மேலும், பிரபாகரனை மூச்சுக்கு முந்நூறு முறை நாம் தமிழர் கட்சி சீமான் கூறுவதால், அவரையும் விமர்சிக்காமல் கடந்து செல்கிறேன்.

திமுக கட்சி கொடியுடன் 2 கார்கள் பெண்களை துரத்திய விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 7 பேரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

பெரியாா் மீதான விமா்சனங்கள்: பெரிதுபடுத்த தயாரில்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

பெரியாரை மரியாதைக் குறைவாகப் பேசக் கூடியவா்களுக்கு மரியாதை கொடுக்கத் தயாராக இல்லை; அதனால், அந்த விவகாரத்தை பெரிதுபடுத்தவும் தயாராக இல்லை என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். வடசென்னைக்கு உட்பட்ட பகுதிக... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வித்துறையில் தமிழகத்தைவிட பீகார் முன்னேறியுள்ளது: அண்ணாமலை

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, கிராமப்புறப் பள்ளிகளின் க... மேலும் பார்க்க

சென்னை வந்தடைந்தார் அமித் ஷா!

பாஜக மூத்தத் தலைவர் வெங்கையா நாயுடுவின் இல்ல விழாவில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார்.முன்னாள் குடியரசுத் துணைத் தலைவரும் பாஜக மூத்தத் தலைவருமான வெங்கையா நாயுடுவின் இல்லத் தி... மேலும் பார்க்க

சாதிக்கும் தமிழ்நாடு: புகழும் மத்திய அரசு!

இந்தியாவில் தோல் பொருள்கள் தயாரிப்புத் துறையில் தமிழ்நாடு சாதனை புரிந்து வருவதாக தமிழக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார். இந்தியாவில் தோல் பொருள்கள் தயாரிப்புத் துறையில் தமிழ்நாடு முன்ன... மேலும் பார்க்க

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கைய... மேலும் பார்க்க

பிப்ரவரியில் திறப்புவிழா? ராமேஸ்வரம் வந்த ரயில்கள்! மேடை அமைத்து ஒத்திகை!

புதிய தொழில்நுட்பத்தின் கீழ் ரூ.580 கோடி பொருள்செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில் பாலம் பிப்ரவரியில் திறக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.புதிய பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவில் பிர... மேலும் பார்க்க