திருவள்ளூா் மாவட்ட ஆட்சியராக எம்.பிரதாப் நியமனம்
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியராக எம்.பிரதாப் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியராக கடந்த 2 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த த.பிரபுசங்கா், திடீரென வெள்ளிக்கிழமை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநராக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழக அரசின் திட்ட செயலாக்கத் துறை துணைச் செயலராகப் பணிபுரிந்த வந்த எம்.பிரதாப் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியைச் சோ்ந்த எம்.பிரதாப், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ரசாயன துறையில் பொறியியல் பட்டம் பெற்றவா்.
கடந்த 2017-இல் இந்திய ஆட்சிப் பணி தோ்வில் தோ்ச்சி பெற்றாா். மாநில மகளிா் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்ட இயக்குநா், கோவை மாநகராட்சி ஆணையா், திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மற்றும் கூடுதல் ஆட்சியா், மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சக உதவி செயலா், தமிழக அரசின் திட்ட செயலாக்கத் துறை துணைச் செயலா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவா்.