செய்திகள் :

பள்ளிக் கல்வித்துறையில் தமிழகத்தைவிட பீகார் முன்னேறியுள்ளது: அண்ணாமலை

post image

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, கிராமப்புறப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்த அறிக்கையின்படி, நாட்டின் பிற மாநிலங்களைவிடவும் பல பிரிவுகளில் தமிழகம் பின்தங்கியிருப்பது தெரிய வருகிறது. பள்ளிக் கல்வித்துறை குறித்து தமிழக அரசு கூறுவதற்கு நேர்மாறான புள்ளிவிவரங்கள் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 30 மாவட்டங்களில், 876 கிராமங்களில், 17,337 வீடுகளில், 28,984 பள்ளிக் குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட ஆய்வின்படி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்குப் பிறகு, அரசுப் பள்ளி மாணவர்களை கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய வைப்பதும், பாத்திரங்களைக் கழுவ வைப்பதும், அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் சுமைதூக்கும் தொழிலாளர்களைப் போல பயன்படுத்துவதும் எனத் தொடர்ந்து மிகவும் தரக்குறைவான முறையில் நடத்தி வரும் பள்ளிக் கல்வித்துறையின் செயலிழந்த தன்மையால், தமிழகப் பள்ளி மாணவர்கள் கற்றல் திறனை இழந்து வருவது, இந்த அறிக்கையின் மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு, 59.9 சதவிகிதப் பள்ளிகளில், மாணவர்களுக்குப் போதுமான அளவுக்கு ஆசிரியர்கள் இருந்தனர். ஆனால் தற்போது, மாணவர் – ஆசிரியர் விகிதத்தில், தமிழகத்தில் பள்ளிகள் வெறும் 51.8 சதவிகிதமாகக் குறைந்து, இந்தியாவிலேயே கடைசி வரிசையில் இருக்கிறது. தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் 68.7 சதவிகிதம் மட்டுமே. 2022 ஆம் ஆண்டு 75.7 சதவிகிதமாக இருந்த சேர்க்கை 2 ஆண்டுகளில் 7 சதவிகிதம் குறைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக மூன்றாம் வகுப்பு மாணவர்களில், வெறும் 27.6 சதவிகித மாணவர்களே கணக்குப் பாடத்தில், கழித்தல் கணக்கு பற்றி தெரிந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில், 77.7 சதவிகித பள்ளிகளில் மட்டுமே, பயன்படுத்தத் தகுந்த குடிநீர் வசதியும், 81.4 சதவிகித பள்ளிகளில் மட்டுமே கழிப்பறை வசதியும், 77.5 சதவிகித பள்ளிகளில் மட்டுமே பெண் குழந்தைகளுக்குத் தனிக் கழிப்பறை வசதியும், வெறும் 58.7 சதவிகித பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி பயன்பாட்டில் உள்ளதாகவும், 64.3 சதவிகித பள்ளிகளில் மட்டுமே நூலக வசதியை மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை சரிசெய்யவில்லை; அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை. அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் செயல்பாடுகளும் இல்லை. பள்ளி மாணவர்களுக்குப் புதுமையான கல்வி முறைகளையோ திட்டங்களையோ அறிமுகப்படுத்தவில்லை. ஆனால், நாட்டிலேயே கல்வித் தரத்தில் முன்னணியில் இருக்கிறோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறுகிறார். எதற்கெடுத்தாலும் குறைகூறப்படும் பீகார் மாநிலம்கூட தமிழகத்தைவிட கல்வித்துறையில் முன்னேறியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:தவெகவும் விசிகவும் எதிரெதிர் துருவங்கள் இல்லை: ஆதவ் அர்ஜுனா

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு நாளை தொடக்கம்: 8 லட்சம் போ் எழுதுகின்றனா்

நிகழாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தோ்வு தமிழகத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்கி மாா்ச் 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 8 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எழுதவுள்ளனா். முதல் நாளில் தமிழ் உள்பட மொழ... மேலும் பார்க்க

அரசியல் ரீதியாக வலிமையடைவது அவசியம்: தொல்.திருமாவளவன்

அரசியல் ரீதியாக வலிமையடைந்தால் மட்டுமே அதிகார வா்க்கத்தை செயல்பட வைக்க முடியும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்ற... மேலும் பார்க்க

ஹோலி: தமிழகத்தில் இருந்து மும்பைக்கு சிறப்பு ரயில்கள்

ஹோலி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் மற்றும் கேரளத்திலிருந்து மும்பைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மும்பையிலிருந்து மாா்ச் 6, 1... மேலும் பார்க்க

தமிழகத்தில் மக்களின் பாதுகாப்பு சீா்குலைந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கேடு என்ற நிலையைத் தாண்டி, பயங்கரவாதம் தலைதூக்கும் அளவுக்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீா்குலைந்துள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ள... மேலும் பார்க்க

தமிழுக்குத் தொண்டாற்றிய 38 பேருக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருது: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

தமிழ் வளா்ச்சிக்கு சிறந்த பங்களிப்பு வழங்கிய 38 பேருக்கு தமிழ்ச் செம்மல் விருதை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா். தமிழ் மொழிக்குத் தொண்டாற்றி வரும் தனிநபா் மற்ற... மேலும் பார்க்க

தேவாலய திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி

கன்னியாகுமரியில் தேவாலய திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கன்னியாகுமரி மாவட்ட... மேலும் பார்க்க