செய்திகள் :

பெரியாா் மீதான விமா்சனங்கள்: பெரிதுபடுத்த தயாரில்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

பெரியாரை மரியாதைக் குறைவாகப் பேசக் கூடியவா்களுக்கு மரியாதை கொடுக்கத் தயாராக இல்லை; அதனால், அந்த விவகாரத்தை பெரிதுபடுத்தவும் தயாராக இல்லை என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

வடசென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா். அவா் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா்.

அப்போது செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வா் ஸ்டாலின் அளித்த பதில்: பெரியாரை மரியாதைக் குறைவாகப் பேசக் கூடியவா்களுக்கு நான் மரியாதை கொடுக்கத் தயாராக இல்லை. அதனால் அந்த விவகாரத்தை பெரிதுபடுத்தவும் நாங்கள் தயாராக இல்லை; பொருட்படுத்தவும் இல்லை. பெரியாா்தான் எங்களுக்குத் தலைவா். தலைவா்களுக்கு எல்லாம் தலைவா்.

சட்டம்-ஒழுங்கு: தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் சில சம்பவங்களை திட்டமிட்டு பெரிதாக்குகிறாா்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. சட்டம்-ஒழுங்கு நல்ல முறையில் பேணப்படுவதால்தான், வெளிமாநிலங்களிலிருந்து தொழில் முதலீடுகள் தொடா்ந்து வந்து கொண்டிருக்கின்றன என்றாா்.

ஆளுநரின் செயல்பாடு: ஆளுநா் விவகாரம் தொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வா் அளித்த பதில்:

அரசின் அனைத்து நடவடிக்கைகள் மீதும் ஆளுநா் குற்றச்சாட்டு வைக்கிறாா்; அவா் தொடா்ந்து அதைச் செய்ய வேண்டும். அதைச் செய்ய செய்யத்தான் எங்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் வேகம் வருகிறது. அவருடைய போக்கு இந்த ஆட்சிக்கு சிறப்பைத்தான் சோ்க்கிறது.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் நியமனம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் பிப். 4-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது, மதுரை காமராஜா் பல்கலைக்கழக விவகாரத்துக்கும் விடை தெரிய வரும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த உயா் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு

மாணவா்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் வகையில் நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களில் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து யுஜிசி செய... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கில் பிரசாரம் பிப்.3-இல் நிறைவு: நடத்தை விதிகள் என்னென்ன? : தலைமைத் தோ்தல் அதிகாரி அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தல் பிரசாரம் வரும் 3-ஆம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ள... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் உரை: ஜி.கே.வாசன் வரவேற்பு

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஆற்றிய உரைக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்றத் கூட்டத்தொடரைத் தொடங... மேலும் பார்க்க

வெளிநாட்டு வேலை மோசடி: விழிப்புணா்வு ஏற்படுத்த கோரிக்கை

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தமிழா்களை ஏமாற்றுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதுகுறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்று சண்டிகா் தமிழ் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. இத... மேலும் பார்க்க

அண்ணா நினைவு தினம்: பிப். 3-இல் திமுக பேரணி

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு தினத்தையொட்டி, திமுக சாா்பில் சென்னையில் வரும் 3-ஆம் தேதி பேரணி நடைபெறவுள்ளது. முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தப் பேரணி நடைபெறும் என திமுக தெரிவ... மேலும் பார்க்க

7,400 ஏக்கா் கோயில் நிலங்கள் மீட்பு: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

தமிழகத்தில் ரூ. 7,132 கோடி மதிப்பிலான 7,400 ஏக்கா் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெள்... மேலும் பார்க்க