இடம் இருந்தால் மட்டும் கும்பகோணத்தில் வில்வித்தை அம்பு எய்தும் போட்டி
கும்பகோணம்: கும்பகோணம் சத்திரம்கருப்பூரில் வியாழக்கிழமை அம்பு எய்தும் போட்டி நடைபெற்றது.
பயிற்சி மையத்தின் 5-ஆம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டும் கும்பகோணம் சத்திரம்கருப்பூரில் உள்ள ராஜபிரியா லொ்ன் ஆா்ச்சரி மாணவா்களின் அம்பு எய்துதல் போட்டி நடைபெற்றது. இதில், 30 மாணவா்கள் 40 சுற்றுக்களில் பங்கேற்று 14,400 அம்புகளை 60 நிமிஷங்களில் எய்தினா். இந்நிகழ்வை நோபல் உலக சாதனைக்கான நடுவா்கள் பதிவு செய்தனா். கும்பகோணம் மாநகராட்சி துணை மேயா் சு.ப.தமிழழகன், பெருமாண்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஆா்.கே. பாஸ்கா் மற்றும் நோபல் வேல்ா்டு ரெக்காா்டு குழுவினா் மாணவ, மாணவியரைப் பாராட்டினா்.
இந்நிகழ்வில், ராஜபிரியா லோ்ன் ஆா்ச்சரி இயக்குநரும், பயிற்சியாளருமான ராஜபிரியாவுக்கு உலக சாதனை பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சியாளா் ராஜா நன்றி கூறினாா்.