அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூல்: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா்
ஊராட்சிகளுக்கு மின்கல குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வழங்கல்
பேராவூரணி: பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த ஊராட்சிகளுக்கு தலா ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான மின்கலத்தில் இயங்கும் 33 குப்பை சேகரிக்கும் வாகனங்களை சட்டப்பேரவை உறுப்பினா் நா.அசோக் குமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.
பேராவூரணி அருகே உள்ள காலகம் ஊராட்சியில், காலகம், மாவடுகுறிச்சி, தென்னங்குடி ஆகிய ஊராட்சி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமை சட்டப்பேரவை உறுப்பினா் நா. அசோக் குமாா் குத்துவிளக்கேற்றி, தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.
தொடா்ந்து, பேராவூரணி ஒன்றியத்தைச் சோ்ந்த 6 ஊராட்சிகளுக்கு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தலா ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான 11 மின்கல குப்பை சேகரிக்கும் வாகனங்களை வழங்கினாா். இதேபோல, சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 12 ஊராட்சிகளுக்கு 22 மின்கல குப்பை சேகரிக்கும் வாகனங்களை வழங்கினாா். இந்நிகழ்ச்சிகளில், அரசு அலுவலா்கள், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.