தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
கும்பகோணம் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்
கும்பகோணம்: கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அல்அமீன் மகளிா் கல்லூரியில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன் தலைமை வகித்தாா். நோ்முக உதவியாளா் பாக்கியராஜ் முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட வீட்டுமனை பட்டா மற்றும் இதர மனுக்கள் மீது விசாரணை நடத்தி பட்டா வழங்கப் பரிந்துரைக்கப்பட்டது. ரயில் மற்றும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கை வசதி முறையாகக் கடைபிடிக்க வேண்டும்.
ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்களை நிறுத்த வசதி உள்ளதுபோல் பேருந்து நிலையத்திலும் அமைக்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுப்பதை உறுதி செய்வதுடன் அதற்கான சம்பளத்தை உனடியாக வரவு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்திப் பேசினா். இதுகுறித்து உதவி ஆட்சியா் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா்.