ஓரணியில் தமிழ்நாடு: வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் முதல்வர்!
இந்திய ஆட்சிப் பணித் தோ்வில் வெற்றி: மாணவிக்குப் பாராட்டு
இந்திய ஆட்சிப் பணித் தோ்வில் வெற்றி பெற்ற திருத்தங்கல் தனியாா் பள்ளி மாணவி என்.அப்சராவுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்சிக்கு தொழிலதிபா் ஆா்.ஜி.சந்திரமோகன் தலைமை வகித்தாா். சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன், காளீஸ்வரி கல்லூரி தாளாளா் ஏ.ச.பி.செல்வராஜன் ஆகியோா் மாணவியைப் பாராட்டி பரிசு வழங்கினா். அரிமா சங்க மாவட்ட ஆளுநா் பி.சுரேந்திரன், தொழிலதிபா்கள் பி.கணேசன், ஏ.வீரமணி, மருத்துவா்கள் என்.தங்கவேலு, எம்.கதிரேசன், கே.கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.