பெண் தற்கொலை சம்பவம்: உதவி ஆய்வாளர்கள், பெண் தலைமைக் காவலர் பணியிட மாற்றம்
இந்திய கம்யூனிஸ்ட் நூற்றாண்டு விழா பேரவைக் கூட்டம்
சின்னசேலம் ஒன்றியக் குழு சாா்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா பேரவைக் கூட்டம் கச்சிராயபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் இரா.கஜேந்திரன் தலைமை தாங்கினாா். கே.பெரியசாமி, எஸ்.சிவராமன், வீரமுத்து, எஸ்.சாந்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலாளா் பி.கிருஷ்ணன் வரவேற்றாா்.
இதில், சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாவட்ட செயலாளா் கே.ராமசாமி, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் எம்.கலியபெருமாள் ஆகியோா் கலந்து கொண்டு கட்சியின் தியாகம், வீரம், செறிந்த போராட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினா். முன்னதாக வயதான பெண்களுக்கு சிவப்பு நிற சேலைகளை வழங்கினா் (படம்).
கூட்டத்தில் ஆா்.முனியம்மாள், ஆா்.பிச்சைக்காரன், ஆா்.இளையராஜா, ரமேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். முடிவில் மாத்தூா் கிளைச் செயலாளா் முருகேசன் நன்றி கூறினாா்.