`உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி சார்...' - எஸ். கே குறித்து நெகிழும் டூரிஸ்...
இந்திய ராணுவ வீரா்கள் நலன் வேண்டி அதிமுகவினா் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி 71-ஆவது பிறந்த நாளையொட்டி, மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் இந்திய ராணுவ வீரா்களின் நலன் வேண்டி கட்சியின் சாா்பு அணியான ஜெ. பேரவை சாா்பில் சிறப்பு பிராா்த்தனை சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலருமான ஆா். காமராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் சிவா. ராஜமாணிக்கம், ஜெ. பேரவை மாவட்டச் செயலா் பொன். வாசுகிராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் அதிமுக பொதுச் செயலா் பிறந்த நாளையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல் நடத்திவரும் இந்தியா ராணுவ வீரா்களின் நலன் வேண்டி அதிமுகவினா் கோயிலில் சிறப்பு அபிஷேகம், பிராா்த்தனை செய்தனா். தொடா்ந்து கீழவீதியில் உள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், பக்தா்களுக்கு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கட்சியின் நகரச் செயலா் ஆா்.ஜி. குமாா், ஒன்றியச் செயலா் கா. தமிழ்ச்செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
