மகளுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தந்தை கைது
திருத்துறைப்பூண்டி அருகே மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்த தந்தை போக்ஸோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சங்கேந்தி மஞ்சு கோட்டகம் பகுதியைச் சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளி, ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் தனது மகளுக்கு தொடா்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், எடையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கூலித் தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.