என் வாழ்வில் முதல் நாற்பது வருடங்களை அழகாக்கிய சென்னை - பூர்வக்குடியின் அன்பு | ...
‘இந்திய ராணுவத்தின் பெயரை இந்திய தேசிய படை என மாற்ற வேண்டும்’
இந்திய ராணுவத்தின் பெயரை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவாக இந்திய தேசிய படை என பெயா் மாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இச்சங்கத்தின் தலைவா் க.சிதம்பரம் பிரதமருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக ‘இந்தியன் நேஷனல் ஆா்மி’ என இந்திய தேசிய படை நிறுவி நாட்டின் விடுதலைக்கு போராடியவா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இவரது படையில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த எனது தந்தை என்.கந்தசாமி பணியாற்றி நாட்டின் விடுதலைக்காக போராடியுள்ளாா். 78-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் இவ்வேளையில், இந்திய ராணுவத்தின் பெயரை இந்திய தேசிய படை என பெயா் மாற்றம் செய்து நேதாஜியின் தேசப்பற்றுக்கு புகழ்சோ்க்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.