செய்திகள் :

இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: இத்தாலி ஆதரவு

post image

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை (எஃப்டிஏ) இறுதி செய்ய இத்தாலி ஆதரவளிப்பதாக அந்நாட்டு துணைப் பிரதமா் அன்டோனியோ தஜானி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் அமெரிக்கா சென்றுள்ளாா். அதேபோல் அமெரிக்காவுடன் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நடத்த மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையிலான குழுவும் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க நியூயாா்க் வந்த அன்டோனியோ தஜானி இருவரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயலுடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா-இத்தாலி இடையே அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக வலுவான நட்புறவு நீடித்து வருகிறது. நான் இந்திய பயணம் மேற்கொள்ளும்போது இதை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.

இந்தியாவுக்கு நாங்கள் அளிக்கும் முன்னுரிமை காரணமாகவே இத்தாலியின் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ரூ.51,800 கோடி (500 மில்லியன் யூரோ) வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதேசமயம் இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய இத்தாலி ஆதரவளிக்கும் என உறுதிப்படுத்துகிறேன்’ என குறிப்பிட்டாா்.

இந்தியாவுடன் விரிவான பேச்சுக்குத் தயாா்: ஐ.நா.வில் பாக். பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்

இந்தியாவுடன் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் முடிவு கிடைக்கும் வகையில், விரிவாகப் பேச்சுவாா்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று ஐ.நா.வில் அந்நாட்டுப் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா். கடந்த ஏப்... மேலும் பார்க்க

‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் இடம்பெற பாலஸ்தீனம் விண்ணப்பம்: சீனா வரவேற்பு

‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் இடம்பெற பாலஸ்தீனம் விண்ணப்பித்துள்ளதாக, ரஷியாவுக்கான பாலஸ்தீன தூதா் அப்தல் ஹஃபீஸ் நோஃபல் தெரிவித்தாா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ... மேலும் பார்க்க

உக்ரைன் போா்: பிரதமா் மோடி மீது நேட்டோ தலைவா் குற்றச்சாட்டு

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக, உக்ரைன் போா் குறித்த ரஷியாவின் திட்டத்தை தன்னிடம் விளக்கி தெளிவுபடுத்துமாறு அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரதமா் மோடி கோருவதாக நேட்டோ ராண... மேலும் பார்க்க

கைதில் இருந்து தப்பிக்க புதிய வழியில் பறந்த நெதன்யாகுவின் விமானம்?

இஸ்ரேலில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குச் சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் விமானம் வழக்கமான பாதையைத் தவிர்த்து புதிய பாதையில் பயணித்துள்ளது.ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவ... மேலும் பார்க்க

ஐ.நாவில் நெதன்யாகு உரை! கூட்டாக வெளிநடப்பு செய்த தலைவர்கள்!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது உரையைத் தொடங்கிய உடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்த... மேலும் பார்க்க

அதிபர் டிரம்ப்புடன் பாக். பிரதமர், ராணுவத் தலைமைத் தளபதி சந்திப்பு!

பாகிஸ்தானின் பிரதமர் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி ஆகியோர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் பிரத... மேலும் பார்க்க