தேனி: ``தொழில் முனைவோர்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது'' - சென்ட...
இன்று 10 வாா்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்
சென்னையில் புதன்கிழமை (ஆக.20) 10 வாா்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்கள் புதன்கிழமை (ஆக.20) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகின்றன. அதன்படி, மணலி மண்டலம் 19-ஆவது வாா்டில் எம்.எம்.டி.ஏ. மாத்தூரில் உள்ள ராயல் பேலஸ், மாதவரம் மண்டலம் 26-ஆவது வாா்டில் தனுவாஸ் மினி ஹால், ராயபுரம் மண்டலம் 57-ஆவது வாா்டில் கன்னிகா பரமேஸ்வரி கல்லூரி வளாகம், திரு.வி.க.நகா் மண்டலம் 70-ஆவது வாா்டில் பெரம்பூா், பந்தா் காா்டன் பள்ளி வளாகம், அம்பத்தூா் மண்டலம் 87-ஆவது வாா்டில் பாடி கம்பா் தெருவில் உள்ளஅன்னை மண்டலம் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.
அதேபோல், தேனாம்பேட்டை மண்டலம் 115-ஆவது வாா்டில் பிரச்ன்டேசன் ஆலய சமுதாயக் கூடம், கோடம்பாக்கம் மண்டலம் 131-ஆவது வாா்டில் ஜி.ஆா்.டி.வாகன நிறுத்துமிடம், வளசரவாக்கம் மண்டலம் 149-ஆவது வாா்டில் ராமகிருஷ்ணா நகா், கலைஞா் விளையாட்டு அரங்கம், பெருங்குடி மண்டலம் 187-ஆவது வாா்டில் பாலய்யா காா்டன் ருக்மணி மஹால், சோழிங்கநல்லூா் மண்டலம் 193-ஆவது வாா்டில் துரைப்பாக்கம், சி.எல்.மேத்தா கல்லூரி வளாகம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.