காஸா மருத்துவமனை மீது தாக்குதல்; 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் பலி - நெதன்யா...
இன்றுமுதல் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்
சேலம்: மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 26-ஆம் தேதிமுதல் செப். 12-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:
2025-ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகள் 26-ஆம் தேதிமுதல் செப். 12-ஆம் தேதிவரை பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவினா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியா்கள் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் நடைபெறவுள்ளன.
இதில், தடகளம், நீச்சல், கூடைப்பந்து, கைப்பந்து, கபடி, மண்டல அளவிலான கடற்கரை கையுந்துப்பந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியா்களுக்கான அனைத்துப் போட்டிகளும் மகாத்மா காந்தி விளையாட்டரங்கிலும், கேரம், சிலம்பம், பால் பேட்மிண்டன், கோ-கோ மற்றும் மண்டல அளவிலான குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுப் போட்டிகள் விஎஸ்ஏ பொறியியல் கல்லூரியிலும், கால்பந்து போட்டிகள் மகாத்மா காந்தி விளையாட்டரங்கம், புனிதபால் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிறுமலா் மேல்நிலைப் பள்ளியிலும், செஸ் விளையாட்டுப் போட்டிகள் செயின் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், கிரிக்கெட் போட்டிகள் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு பொறியியல் கல்லூரியிலும், கைப்பந்து போட்டிகள் ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளன என்றாா்.