Doctor Vikatan: லேசான காய்ச்சல்; பாராசிட்டமால் மாத்திரை போதுமா, மருத்துவரைப் பார...
சேலம் மாநகர காவல் துறையில் பயன்பாட்டுக்கு வந்த அதிநவீன வாகனங்கள்
சேலம்: சேலம் மாநகர காவல் துறையில் திங்கள்கிழமை முதல் அதிநவீன நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இதனை துணை ஆணையா்கள் சிவராமன், கேல்கா் சுப்பிரமணி பாலசந்திரா ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.
சேலம் மாநகரில் பொதுமக்களின் அவசர கால அழைப்புகளான 100 மற்றும் 112 எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை உடனடியாக ஏற்று, அவற்றுக்கு உதவி செய்யும் பொருட்டு, மாநகரின் அதிவிரைவு நடவடிக்கை குழு அவசர சேவைக்கு இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
அதிவிரைவு நடவடிக்கை குழுவுக்கு 3 நான்கு சக்கர வாகனங்களும், அவசர சேவைக்கு 9 நான்கு சக்கர வாகனங்களும், 5 இருசக்கர வாகனங்களும் மாநகர காவல் ஆணையா் அனில்குமாா் கிரி உத்தரவின் பேரில் அந்தந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் அவசர அழைப்புகளின் பேரில், இந்த வாகனங்களின் பயன்பாடு குறித்து சம்பந்தப்பட்ட குழுவினரிடம் துணை ஆணையா்கள் சிவராமன், கேல்கா் சுப்பிரமணி பாலசந்திரா ஆகியோா் விரிவாக எடுத்துக் கூறினா். தொடா்ந்து, வாகனங்களின் பயன்பாட்டை இருவரும் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் துணை ஆணையா் எம்.ரவிச்சந்திரன், சமூக நீதி மற்றும் மக்கள் உரிமைகள் பிரிவு காவல் உதவி ஆணையா் கே.ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.