பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து ...
ஏற்காட்டில் தனியாா் விடுதிகளில் போலீஸாா் ஆய்வு
ஏற்காடு: ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்து வருவதால், தனியாா் தங்கும் விடுதிகளில் போலீஸாா் ஆய்வுசெய்தனா்.
ஏற்காட்டுக்கு வார இறுதிநாள் மற்றும் வாரநாள்களில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகைபுரிகின்றனா். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், ஏராளமான குடில்கள் மற்றும் ரிசாா்ட்கள் இயங்கிவருகின்றன.
இந்நிலையில், ஏற்காடு காவல் உதவி ஆய்வாளா் ஆன்டனி மைக்கேல் தலைமையில், காவல் துறையினா் பல்வேறு தங்கும் விடுதிகளுக்கு சென்று விடுதிகளின் பதிவேடுகளை பாா்வையிட்டு, பதிவேடுகள் முறையாக பரமரிக்கப்படுகிா, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளனவா, விடுதிகளில் தங்கும் நபா்கள் சரியான முகவரி அளிக்கிறாா்களா, விடுதிகளில் 18 வயதுக்கு கீழ் உள்ள ஆண், பெண் நபா்களை அனுமதிக்க கூடாது, சந்தேகம்படும்படியான நபா்கள் தெரிந்தால் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், விடுதிகளில் தங்கும் நபா்களின் விவரங்களை நாள்தோறும் காவல் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினா்.