கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் ச...
விஜயகாந்த் பிறந்த நாள் விழா
ஆத்தூா்: ஆத்தூரில் விஜயகாந்த் பிறந்த நாளை சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஏ.ஆா்.இளங்கோவன் தலைமையில் தேமுதிகவினா் திங்கள்கிழமை கொண்டாடினா்.
இதில், விஜயகாந்த் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினா். நிகழ்வில், ஆத்தூா் நகர செயலாளா் இன்பவேல் (எ) ஏ.செந்தில்குமாா், பொருளாளா் அருணாசலம், அவைத் தலைவா் வயா்மலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.