4 ஆண்டு தடைக்குப் பின்... ஒருநாள் அணிக்குத் திரும்பும் ஜிம்பாப்வே ஜாம்பவான்!
ஆத்தூரில் இன்று குடிநீா் விநியோகம் ரத்து
ஆத்தூா்: ஆத்தூரில் செவ்வாய்க்கிழமை குடிநீா் விநியோகம் ரத்துசெய்யப்படுகிறது என ஆத்தூா் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆத்தூா் நகராட்சிக்கு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தால் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேட்டூரில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) குடிநீா் விநியோகம் செய்ய இயலாது. எனவே, ஆத்தூா் நகர பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தெரிவித்துள்ளாா்.