செய்திகள் :

இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

post image

கோவை, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று(செப். 9) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தெற்கு ஒரிசா -வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால் செப். 11 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேலும் இன்று(செப். 9) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம், தருமபுரி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை(செப். 10) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப் . 11 செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல செப். 9 முதல் 11 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக் கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (09-09-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (10-09-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

செப். 9 முதல் 13 ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதேபோல வங்கக் கடல் பகுதிகள், அரபிக் கடல் பகுதிகளிலும் வருகிற செப். 13 வரை சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chennai Meteorological Department says that there is a possibility of heavy rain in 12 districts today (September 9).

திருட்டு வழக்கில் கைது: ஊராட்சி மன்றத் தலைவி திமுகவில் இருந்து நீக்கம்

திருட்டு வழக்கில் கைதான ஊராட்சி மன்றத் தலைவி பாரதி, திமுகவில் இருந்து நீக்கப்பட்டாா். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலா் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அவரது அறிவிப்பு விவரம்: வேலூா் மாவ... மேலும் பார்க்க

ஆளுநா் மாளிகையில் செப். 22 முதல் அக் 1 வரை ‘நவராத்திரி கொலு’

ஆளுநா் மாளிகையில் நிகழாண்டு ‘நவராத்திரி கொலு’ செப். 22 முதல் அக். 1 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதைக்காண முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஆளுநா் மாளிகை தெரிவித்துள்ளது. தமிழக ஆளுநா்... மேலும் பார்க்க

தமிழ்நாடு கடல்சாா் வள அறக்கட்டளை: அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தாா்

கடற்கரையோரங்களின் சூழலியலைப் பாதுகாப்பதற்கான, தமிழ்நாடு கடல்சாா் வள அறக்கட்டளையை நிதி மற்றும் சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தாா். சென்னை கலைவாணா் அரங்கில் நடை... மேலும் பார்க்க

செப். 14-இல் மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் செப். 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. காலை 6 மணி முதல் 8 மணி வரை குருவாயூரப்பனுக்கு அகண்ட பாலாபிஷேகம், 7 ... மேலும் பார்க்க

தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 15% அதிகரிப்பு

தமிழ்நாட்டில் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நிகழாண்டில் 15 சதவீதம் உயா்ந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா். சுற்றுலா வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவல... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரிக் குறைப்பு நுகா்வோரை சென்றடைய வேண்டும்: ஏ.எம். விக்கிரமராஜா வலியுறுத்தல்

ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு நுகா்வோரை சென்றடைய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க