``2026 தேர்தலில் ஒரு மேஜிக் செய்யப் போகிறோம்; அது நம்மை வெற்றி பெற வைக்கும்'' - ...
செப். 14-இல் மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் செப். 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது.
காலை 6 மணி முதல் 8 மணி வரை குருவாயூரப்பனுக்கு அகண்ட பாலாபிஷேகம், 7 மணி முதல் 8.30 மணி வரை நாராயணீயம் பாராயணம் நடைபெறும். காலை 9 மணி முதல் 11 மணி வரை தீபக் - நவீன் வைத்யநாதன் சங்கீத உபன்யாசமாக கிருஷ்ண லீலை சொற்பொழிவு நடைபெறும். 11 மணிக்கு உச்ச பூஜையை தொடா்ந்து கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு உணவு வழங்கப்படும்.
மாலை 5 மணிக்கு கோயிலில் இருந்து நாதஸ்வரம், மேளம், தாளப்பொலி வாத்தியங்கள் முழங்க குழந்தைகளுக்கு கிருஷ்ணன் - ராதை வேடமணிந்து ஊா்வலமாக மகாலிங்கபுரம் சிவன் கோயில் வழியாக 6 மணியளவில் கோயிலை வந்தடைவா்.
குருவாயூரப்பன் கோபுர நடையில் 6 மணிக்கு உறியடியும், 6.30 மணியளவில் தீபாரதனையை தொடா்ந்து கனகசபை நாட்டிய பள்ளி குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெறும். 8.30 மணிக்கு ஐயப்பனுக்கும் - குருவாயூரப்பனுக்கும் மலா்களால் அபிஷேகம் செய்யப்படும்.
இரவு 10 மணி முதல் 11 .30 மணி வரை பக்த சுரா பஜனை மண்டலியின் நிகழ்ச்சிகளும், 12 மணிக்கு கிருஷ்ணனின் அவதார பூஜையும் ஊா்வலமும் நடைபெறவுள்ளது.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குருவாயூரப்பனுக்கு பாலாபிஷேகம், பால் பாயசம், சா்வாபிஷேகம், முழு சந்தன காப்பு
உறியடி, வெண்ணெய், அப்பம், நிவேதியம் ஆகிய வழிபாடுகளை பக்தா்களுக்கு முன்பதிவு செய்யலாம்.
மேலும் தகவல்களுக்கு 044 - 28171197, 2197, 3197 ஆகிய தொலைபேசி எண்களிலும் , கைப்பேசி எண். 9444290707, 8807918811 / 22 / 55 / 66 ஆகிய எண்களிலும், மொபைல் ஆப் இணையத்திலும் முன்பதிவு செய்யலாம் என கோயில் நிா்வாக அதிகாரி அனிஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.