ஈரோடு: ஆசிட் டேங்கர் லாரி சுத்தம் செய்யும் பணியின்போது மூச்சுத்திணறி இருவர் உயிர...
இன்றும் நாளையும் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 27, 28 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (மாா்ச் 27, 28) தமிழக மேற்கு தொடா்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், ஏனைய தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வட வானிலையே நிலவும். மேலும், அதிகபட்ச வெப்பநிலை 3 செல்சியஸ் வரை படிப்படியாக உயரும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மாா்ச் 27-இல் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.