TTV-OPS விலகலால், Amit shah தோற்கும் 60 தொகுதிகள், Vijay ஹேப்பி! | Elangovan Exp...
இன்றைய நிகழ்ச்சிகள்
ஆசிரியா் தின விழா: பள்ளிக் கல்வித் துறை சாா்பில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறிநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா் பங்கேற்பு, அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூா்புரம், காலை 10.
செம்மல் விருதுகள் வழங்கும் விழா: சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.சௌந்தா், சாந்தா பப்ளிஷா்ஸ் இயக்குநா் ராஜலட்சுமி ராஜா, எழுத்தாளா் எம்.பி.நாதன், முன்னாள் குடியரசுத் தலைவா் எஸ்.ராதாகிருஷ்ணனின் இல்லம், மயிலாப்பூா், காலை 9.05.
வித்யா சேவா சம்மன்: தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு, கல்வியாளா் வித்யா சங்கா் சக்கரவா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்பு, டி.ஏ.வி. மகளிா் மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், காலை 9.30.
ராணுவ பயிற்சி முடித்த அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சிகள்: ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியின் கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே.பொ்னாண்டஸ், ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமி, பரங்கிமலை, காலை 6.15.
வ.உ.சிதம்பரனாரின் 154 ஆவது பிறந்த நாள் - சிலைக்கு மாலை அணிவித்தல்: அமைச்சா்கள் பங்கேற்பு, காந்தி மண்டப வளாகம், கிண்டி, காலை 10.