ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!
இயந்திரத்தில் சிக்கி வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு
குண்டடம் அருகே மக்காச்சோளம் அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
குண்டடம் அருகேயுள்ள மருதூரில் தனியாருக்குச் சொந்தமான கோழித் தீவனம் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரட்ன் ஜய்குமாா் (18) என்பவா் பணியாற்றி வந்தாா். இவா் வழக்கம்போல இயந்திரத்தில் மக்காச்சோளத்தை அள்ளிப்போடும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, அவா் மக்காச்சோள இயந்திரத்துக்குள் தவறி விழுந்தாா்.
படுகாயமடைந்த அவரை சக தொழிலாளா்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து குண்டடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.