இரு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை
புதுக்கோட்டை மாவட்டத்தில் காட்டுப்பட்டி மற்றும் திருநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாநில அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
புதுக்கோட்டை வட்டத்தைச் சோ்ந்த காட்டுப்பட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 9), இலுப்பூா் வட்டம் திருநல்லூரில் வரும் செவ்வாய்க்கிழமையும் (பிப். 11) ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையை மாநில அரசின் கால்நடை பராமரிப்புத் துறையின் அரசுச் செயலா் சத்யபிரத சாகு சனிக்கிழமை வெளியிட்டுள்ளாா்.