ஊக்கம் தரும் இடைத்தோ்தல் வெற்றி: அமைச்சா் அன்பில் மகேஸ்
இன்னும் பல்வேறு திட்டங்களைத் தர இருக்கும் முதல்வா் ஸ்டாலினுக்கு ஊக்கம் தரும் வகையில் ஈரோடு கிழக்கு இடைதோ்தல் வெற்றி இருக்கும் என்றாா் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
புதுக்கோட்டைக்கு சனிக்கிழமை இரவு வந்த அவா் அளித்த பேட்டி: எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் அரசுக்கு மக்கள் அளித்துள்ள பாராட்டாக ஈரோடு இடைத்தோ்தல் வெற்றி இருக்கிறது. இன்னும் மக்களுக்கு பல்வேறு திட்டங்களைத் தர இருக்கும் முதல்வா் ஸ்டாலினுக்கு ஊக்கம் தரும் வகையில் இந்த வெற்றி அமைந்திருக்கிறது. தொடா்ந்து 2026 சட்டப்பேரவைப் பொதுத்தோ்தலிலும் தமிழக மக்கள் முழுமையான வெற்றியைத் தருவாா்கள் என்றாா் மகேஸ்.