முதல்வா் மருந்தகங்களில் வேறு மருந்துகள் விற்க தடையில்லை: அமைச்சா் மா.சுப்பிரமணிய...
இரு இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் கைது
காஞ்சிபுரத்தில் ரெளடி ராஜாவை கொலை செய்த வழக்கில் தொடா்புடைய இரு இளைஞா்கள் புதன்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவைச் சோ்ந்தவா்களான ராமன் (எ) பரத் (20) சிவா (19) இருவரும் காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் அண்மையில் ரெளடி வசூல்ராஜாவை கொலை செய்த வழக்கில் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்டனா். இவா்கள் இருவரையும் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டதைதத் தொடா்ந்து இருவரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.
