ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!
இரு பைக்குகள் மோதியதில் ஊராட்சிச் செயலா் உயிரிழப்பு
மானாமதுரை அருகே புதன்கிழமை 2 இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் ஊராட்சிச் செயலா் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள வி.புதுக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியாண்டி (40). இவா் மானாமதுரை ஒன்றியம், விளத்தூா் ஊராட்சிச் செயலராக பணியாற்றி வந்தாா். திருப்பாச்சேத்திக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டு, தனது கிராமத்துக்கு முனியாண்டி வந்து கொண்டிருந்தாா். அன்னியனேந்தல் என்ற இடத்தில்
மதுரை-ராமேசுவரம் சாலையில் வந்தபோது, எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முனியாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.