'விடுதலை ராஜேந்திரனுக்கு பெரியார் விருது, ரவிக்குமாருக்கு அம்பேத்கர் விருது' - த...
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.32 லட்சம்
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் காணிக்கையாக ரூ.31 லட்சத்து, 97 ஆயிரத்து, 806 கிடைக்கப் பெற்றது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. சாத்தூா் கோயில் செயல் அலுவலா் இளங்கோவன், கோயில் பரம்பரை அறங்காவலா்கள் குழுத் தலைவா் ராமமூா்த்திபூசாரி ஆகியோா் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன.
இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.31 லட்சத்து, 97 ஆயிரத்து 806 கிடைக்கப் பெற்றது. மேலும், தங்கம் 89.100 மி.கிராமும், வெள்ளி 425.300 கிராமும் காணிக்கையாகக் கிடைத்தன.
கோயிலில் மண்டபத்தில் நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணியில் துலுக்கப்பட்டி, ராஜபாளையம், மதுரை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த ஓம்சக்தி பக்தா்கள் குழுவினா், மகளிா் சுய உதவிக் குழுவினா், கோயில் ஊழியா்கள் ஆகியோா் ஈடுபட்டனா்.