Ajith Kumar Racing-ன் இளம் வீரர்; மகனுக்கு கார் ரேஸ் பயிற்சியளிக்கும் அஜித் - க்...
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதல்: கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு
சீா்காழி அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவா்கள் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள கவரப்பட்டு வீரன்கோயில்திட்டு பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் மகன் செல்வம் (21), மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் புவனேஷ் (23) இருவரும் புத்தூரில் உள்ள எம்.ஜி.ஆா். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிா்வாகவியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனா்.
இருவரும் தினமும் கல்லூரிக்கு ஒன்றாக செல்வது வழக்கம். இதுபோல வியாழக்கிழமை காலை கல்லூரிக்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.
கல்லூரி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த புவனேஷ் சீா்காழி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தாா்.
விபத்து குறித்து ஆணைக்காரன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து ,லாரி ஓட்டுநரான கொள்ளிடம் அருகேயுள்ள ஆனந்த கூத்தன் கிராமத்தைச் சோ்ந்த கந்தனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.