இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் கணினி மைய உரிமையாளா் உயிரிழப்பு
மகாராஜாகடை அருகே இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த கணினி மைய உரிமையாளா் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி வட்டம், சின்ன திம்மநாயனப்பள்ளியைச் சோ்ந்தவா் சின்னராஜ் (57). கிருஷ்ணகிரியில் கணினி மையம் நடத்தி வந்த இவா், இருசக்கர வாகனத்தில் வரட்டனப்பள்ளி - மகாராஜாகடை சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு சென்றாா்.
பெலவா்த்தி அருகே சென்று கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி இருசக்கர வாகனம் கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த சின்னராஜை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே சின்னராஜ் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து மகாராஜாகடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.