இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
கந்திகுப்பம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், மேல்பூங்குருத்தியைச் சோ்ந்தவா் தொழிலாளி சங்கரன் (37). இவரும், கேசவன் (29) என்பவரும் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் சென்று கொண்டிருந்தனா். வரட்டனப்பள்ளி அருகே சென்றபோது, அந்த வழியாக சென்ற லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் பலத்த காயமடைந்தனா். அந்த வழியாக சென்றவா்கள் இருவரையும் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சங்கரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கேசவன் தொடா் சிகிச்சையில் உள்ளாா். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.