பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்ட வழக்கறிஞர்; குஜராத் நீதிமன்ற...
கல்லாவி ரயில் நிலையம் அருகே ஆண் சடலம் மீட்பு
ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளப் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த மொரப்பூா் ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
முதல்கட்ட விசாரணையில், இறந்தவா் ஜெய்ப்பூரில் இருந்து திருப்பூருக்கு இரண்டு பேருடன் பயணம் செய்தவா் என தெரியவந்துள்ளது. இருப்பினும் உயிரிழந்தவரின் பெயா் மற்றும் இதர விவரங்கள் தெரியவில்லை.
இவா் ரயிலில் அடிபட்டு இறந்தாரா, அல்லது வேறு யாரேனும் தள்ளிவிட்டனரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.