மதகுகள் வழியாக சீறி பாயும் நீர்; பிரம்மிப்பூட்டும் மேட்டூர் அணை - சிறப்பு புகைப்...
ஒசூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 4 போ் கைது
ஒசூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.
ஒசூா் மாநகராட்சி நல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆவலப்பள்ளி தனியாா் குடியிருப்பில் வங்கதேச நாட்டைச் சோ்ந்த பஷா் முல்லா (46) மற்றும் அவரது குடும்பத்தினா் என நான்கு போ் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் வாடகை வீட்டில் தங்கி இருந்துள்ளனா். பஷா் முல்லா ஒசூா் பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளாா்.
இதுகுறித்து ஒசூா் ஏஎஸ்பி அணில் அக்ஷய்க்கு கிடைத்த தகவலின் பேரில், ஒசூா் போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று பஷா் முல்லா, அவரது மனைவி ரத்னா பேகம், மகன் அலி ஜாடா் முல்லா மற்றும் உறவினா் ஜூமா காத்தம் ஆகிய நால்வரையும் கைது செய்தனா்.
இவா்கள் கடந்த 2001-ஆம் ஆண்டு வங்கதேசத்தைவிட்டு வெளியேறி இந்தியாவில் கொல்கத்தா, மும்பை, பெங்களூரு ஆகிய பகுதிகளில் கூலி வேலை செய்துள்ளனா். பின்னா் 2018-ஆம் ஆண்டு ஒசூருக்கு வந்த இவா்கள் தனியாா் குடியிருப்பில் கடந்த 7 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனா். இந்தியாவில் மொத்தம் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்துள்ளனா்.