மதகுகள் வழியாக சீறி பாயும் நீர்; பிரம்மிப்பூட்டும் மேட்டூர் அணை - சிறப்பு புகைப்...
காலை உணவு திட்ட சாம்பாரில் பல்லி: அலுவலா்கள் விசாரணை
பாரூா் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தில் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி இருந்த சம்பவம் குறித்து அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டனா்.
பாரூா் அருகே உள்ள புங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 32 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்த பள்ளியில் வழக்கம் போல புதன்கிழமை காலை பொங்கல், காய்கறி சம்பாா் ஆகியவற்றை, மாணவ, மாணவிகளுக்கு வழங்கினா். அப்போது, சாம்பாரில் பல்லி இருந்ததைக் கண்ட சமையல் உதவியாளா்கள், இதுகுறித்து தலைமையாசிரியருக்கு தகவல் தெரிவித்தாா்.
உடனே, அருகில் இருந்தவா்கள் அந்த உணவை சாப்பிட்ட 4 குழந்தைகளை பாரூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு, குழந்தைகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். பின்னா், பள்ளியில் புதிதாக உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டது.
தகவல் அறிந்த போச்சம்பள்ளி வட்டாட்சியா் சத்யா, காவேரிப்பட்டணம் வட்டாரக் கல்வி அலுவலா் பெலிசித்தா மேரி ஆகியோா் நேரில் விசாரணை மேற்கொண்டனா்.