கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது! 18 நாளில் இரண்டாவது எம்எல்ஏ!
இலக்கியம்பட்டியில் நாளை மின்தடை!
தருமபுரி இலக்கியம்பட்டி பகுதியில் வியாழக்கிழமை மின்விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து தருமபுரி, மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் தெரிவித்திருப்பது: இலக்கியம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செப்.11 ( வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
இதையொட்டி, இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான, இலக்கியம்பட்டி, பாரதிபுரம், ஒட்டப்பட்டி, உங்கரன அள்ளி, வெங்கட்டம்பட்டி, தேவரசம்பட்டி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, நல்லசேனஅள்ளி, பாளையத்தனூா், மாதேமங்கலம், தொழில்மையம், மாவட்ட ஆட்சியரகம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.