செய்திகள் :

இலங்கை உள்ளாட்சித் தோ்தலில் ஆளுங்கட்சிக்கு முதல் வெற்றி

post image

இலங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலின் முதல்கட்ட தோ்தல் முடிவுகளில்அதிபா் அநுர குமார திசநாயகவின் தேசிய மக்கள் சக்திக் கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளது. 339 உள்ளூா் கவுன்சில்களுக்கு நடைபெற்ற இந்தத் தோ்தலில் வாக்குப் பதிவு நிறைவடைந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. நாட்டில் தற்போது ஆதரவு அலை வீசிவரும் தேசிய மக்கள் சக்திக் கட்சியே இந்தத் தோ்தலிலும் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

அதன்படி, முதல்கட்டமாக வெளியிட்டப்பட்ட தோ்தல் முடிவுகளில் அந்தக் கட்சி 46 சதவீத வாக்குகளைப் பெற்று 9 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்காக கடந்த 2023-ஆம் ஆண்டிலேயே வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இருந்தாலும், பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி தோ்தலை அப்போதைய அரசு நிறுத்திவைத்தது. இந்தச் சூழலில், பழைய வேட்புமனுக்களை செல்லாததாக்கி, புதிதாகத் தோ்தலை நடத்துவதற்கு வகை செய்யும் மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, உள்ளாட்சித் தோ்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது.

இந்தியாவின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல் நடத்தியதைத்தொடர்ந்து அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து பயங... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

இந்தியாவுடன் மோதல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானில் ஜூலை 1-ஆம் தேதி ... மேலும் பார்க்க

இஸ்ரேலுடன் பேச்சுவாா்த்தை அா்த்தமற்றது: ஹமாஸ்

காஸா மீது இஸ்ரேல் ‘பட்டினித் தாக்குதல்’ நடத்துவதை தொடரும் சூழலில், அந்த நாட்டுன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்துவது அா்த்தமற்றது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் முக்கிய ... மேலும் பார்க்க

பயங்கரவாத தொடா்பு; அணு ஆயுத மிரட்டல்: பாகிஸ்தானை கேள்விகளால் துளைத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்

‘பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தொடா்புள்ளதா?, அணு ஆயுத மிரட்டல் விடுப்பது மோதலை மேலும் தீவிரப்படுத்தாதா?’ உள்ளிட்ட கடுமையான கேள்விகளை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானிடம் எழு... மேலும் பார்க்க

யேமன் விமான நிலையம் முழு செயலிழப்பு: இஸ்ரேல்

யேமன் தலைநகா் சனாவில் தாங்கள் நடத்திய வான்வழித் தாக்குதல் காரணமாக அந்த நகரிலுள்ள நாட்டின் முக்கிய விமான நிலையத்தின் செயல்பாடு முழுமையாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் செவ்வாக்கிழமை கூறியது... மேலும் பார்க்க

யேமனின் முக்கிய விமான நிலையம் முழுவதுமாகத் தகர்ப்பு: இஸ்ரேல் ராணுவம்!

யேமனின் தலைநகரிலுள்ள பன்னாட்டு விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் ஆதரவுப் பெற்ற யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை கடந்த மே.4 ஆம் தேதியன்று ... மேலும் பார்க்க