"பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்வேன்" - ஓபிஎஸ் விலகல் குறித்து நயினார் நாகேந்திர...
இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் தர வலியுறுத்தல்
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகுகளை மீட்க புதுவை அரசு மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமைச்சரிடம் மீனவா்கள் வலியுறுத்தினா்.
காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த மீனவா்கள் கடலில் மீன்பிடிக்கும்போது, எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்யப்படுவதும், படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டவா்கள் விடுவிக்கப்பட்டனா். ஆனால், படகுகள் விடுவிக்கப்படவில்லை.
படகை இழந்தவா்கள் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகனை செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.
காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த 22 விசைப்படகுகள் இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ளன. பல அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மீனவா்கள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளாா். அவரை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதோடு, படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக புதுவை முதல்வா், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். முதல்வரிடம் இதுதொடா்பாக பேசுவதாக அமைச்சா் உறுதியளித்ததாக மீனவா்கள் தெரிவித்தனா்.